tamilnadu

img

பொதுத்துறை வர்த்தக நிறுவனங்களை மூட மத்திய அரசு திட்டம் - பியூஷ் கோயல் அறிவிப்பு

பொதுத்துறை வர்த்தக நிறுவனங்களை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

பொதுத்துறை நிறுவனங்களான ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (State Trading Corporation) மற்றும் மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் (Metals & Minerals Trading Corporation) ஆகியவற்றின் பங்குகள் 90 சதவீதமும், புராஜெக்ட் மற்றும் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (Project and Equipment Corporation) என்ற நிறுவனத்தின் பங்குகள் 100 சதவீதமும் அரசிடம் உள்ளது. இந்நிலையில், ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன், புராஜெக்ட் மற்றும் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன், மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆகிய வர்த்தக நிறுவனங்களை மூட மத்திய அரசு திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த அறிக்கையை வர்த்தகத் துறை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

மேலும், இந்த மூன்று நிறுவனங்களையும் மறு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே மூட முடிவு செய்யப்பட்டது என்றும், இதற்கான முடிவு கடந்த மாதமே எடுக்கப்பட்டது என்றும், எனினும் இது குறித்த முடிவை வர்த்தக துறை இறுதி செய்யவில்லை என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.